Categories
சினிமா

இது அனைவருமே பார்க்க வேண்டிய ஒரு படம்…. வாழ்த்து சொன்ன வெங்கையா நாயுடு…..!!!!

இயக்குனர் ஹனுராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த திரைப்படம் “சீதா ராமம்”. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள்தாக்கூர் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பல பேர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகிய இந்த படம் ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சீதா ராமம் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவற்றில் “நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பத்துறைகளின் ஒருங்கிணைப்பில் ஒரு அழகான காட்சி உருவாகி இருக்கிறது. எளிமையான காதல் கதையைப் போன்று இல்லாமல் வீரமிக்க சிப்பாய் பின்னணியுடன், பல விதமான உணர்வுகளை வெளிக் கொணரும் இப்படம், அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் ஆகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மற்றொரு பதிவில் “வெகு நாட்களுக்குப் பின் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த உணர்வை இது தந்தது. போர் ஓசை இன்றி கண்களுக்கு இதமான இயற்கையின் அழகை வெளிப்படுத்தியதற்கு இயக்குனர் ஹனு ராகவபுடி, தயாரிப்பாளர் அஷ்வினி தத், ஸ்வப்னா மூவி மேக்கர்ஸ் மற்றும் படக் குழுவினருக்கு வாழ்த்துகள்” என தெலுங்கில் குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |