பிராட்வே ரத்தன் பஜாரில் உள்ள ரேஷன் பெட் சாலை வரை மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான சாலையோர கடைகள் அமைந்துள்ளது. இதில் 160 கடைகள் வாடகை மற்றும் நிலுவை வரி தொகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி கடையின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இதில் சுமார் 30 கடைகளில் உரிமையாளர்கள் வரியை உடனடியாக செலுத்தியுள்ளனர். ஆனால் வரி செலுத்தாத மீதமுள்ள 130 கடைகளுக்கு நேற்று காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் அந்த கடைக்காரர்கள் வரியை செலுத்தாமலே இருந்துள்ளனர். இதனை அடுத்து மாநகராட்சி சார்பில் துணை வருவாய்த்துறை அதிகாரிகள் நீதிபதி ரங்கநாதன் முருகேசன், உரிமம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வரி மதிப்பீட்டாளர் ரமகதுல்லா போன்றோர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வரி செலுத்தாத 130 கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளார்.