Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீ பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன…? ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒத்திகை…!!!!!!!

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வடசென்னை தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அதிகாரி முருகன் பேசிய போது, கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் டீன் டாக்டர் தேரணி ராஜன் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் தீ விபத்து பற்றியும் தடுப்பு உபகரணங்களை எவ்வாறு கையாள வேண்டும். தீ பாதுகாப்பு நடவடிக்கை என்னென்ன என்பது பற்றியும் மாதிரி ஒத்திகை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக மருத்துவமனையில் தீ விபத்து பற்றி ஒத்திகை பயிற்சி அளித்துள்ளோம். மேலும் தொடர்ந்து துறைவாரியாக பயிற்சி அளிக்க இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |