Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்த வாலிபர்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!!

சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சிறுமி முத்துக்குமாரிடம் பேசவில்லை. இந்நிலையில்  நேற்று அந்த சிறுமி தனது தாயுடன்  அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது நண்பர்களுடன் வந்த முத்துக்குமார் சிறுமியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் சிறுமியின் தாயை  அவதூறாக பேசியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய்  முத்துக்குமாரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

மேலும் அந்த சிறுமியின்  படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துக்குமாரை போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |