பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஊராட்சி செயலாளர் வேலை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி ஊழியரிடம் பணத்தை பெற்று கொண்டு வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு வேலைக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி தனது உறவினர்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் இதனை ஊராட்சி மன்ற தலைவர் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் நந்தினிக்கு ஆதரவாக 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.