கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சூழல் சுற்றுலா மையத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர்கள் பூங்கா, குதிரை சவாரி, ஜிப்லைன், பரிசல் சவாரி போன்றவைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகளை தற்போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வனத்துறை அதிகாரி பரிசு கோப்பையை வழங்கி பாராட்டினார். மேலும் நிகழ்ச்சியின் போது வனத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.