தமிழகத்தில் சமீப காலமாக தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு இருப்பது கவலை தரும் நிகழ்வாக உள்ளது . கடந்த சில மாதங்களாக மாணவர்கள் அதாவது 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றன.
இவர்களுக்கு மனரீதியாக கவுன்சிலிங் கொடுப்பதற்கு பல முயற்சிகளை தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்கொலைகளை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் எலி மருந்து, சாண பவுடர் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை செய்ய முடிவு செய்திருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .