இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று “ஜல் சல் ஜிவன்” திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம குடும்பங்களுக்கு தரமான குடிநீர் விநியோகத்தை வழங்குவதே நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை நாட்டில் 52% க்கு அதிகமான கிராம குடும்பங்களுக்கு இப்போது குழாய் வழி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய பகுதிகள் முறையை நாட்டின் முதல் சான்றிதழ் பெற்ற மாநிலமாகவும் யூனியன் பிரதேசமாகவும் மாறியுள்ளது. அங்கு அனைத்து கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கோவாவில் உள்ள 2.63 இலட்சம் கிராம குடும்பங்களுக்கும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் நெய்வேலியில் உள்ள 85,156 குடும்பங்களும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீரை பெறுகின்றனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் பிரச்சாரத்தின் மிகப்பெரிய வெற்றிகளில் இதுவும் ஒன்றாகும். ஏனென்றால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் 30 கோடி கிராம குடும்பங்கள் மட்டுமே குழாய் இணைப்புகள் மூலம் குடிநீரை பெற்று வந்தனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டுமே ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 7 கோடி கிராம குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 10 கோடிக்கு மேற்பட்ட கிராமப்புற குடும்பங்கள் குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீர் வசதி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு மற்றும் குறிப்பாக கோவா இன்று மைக்கல்லை எட்டியுள்ளது. நாட்டின் முதல் ‘ஹர் கர் ஜல்’ சான்றிதழ் பெற்ற மாநிலமாக கோவா மாறி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.