திடீரென கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இந்த பகுதிகளில் காட்டெருமை, புலி, சிறுத்தை, யானை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இங்குள்ள ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறுகிறது. இதில் குறிப்பாக சிறுத்தைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து நாய்கள், மாடுகள் மற்றும் ஆடுகள் போன்றவற்றை கடித்து கொன்று விடுகிறது. இந்நிலையில் தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயியான சித்துராஜ் என்பவர் தன்னுடைய வீட்டில் சில மாடுகளை வளர்த்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் மேய்ச்சலுக்காக மாடுகளை அவிழ்த்து சென்றிருந்தார். அப்போது ஒரு கன்று கட்டி ஒன்று திடீரென உயிரிழந்து கிடந்தது. இதை ஏதோ ஒரு வனவிலங்கு கடித்துக் கொன்றுள்ளது. இது குறித்து சித்தராஜ் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த கன்று குட்டியை பார்த்தபோது அது சிறுத்தை கடித்து உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் கால்நடைகளை தொடர்ந்து விலங்குகள் கடித்துக் கொள்வதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.