Categories
உலக செய்திகள்

கட்டிப்பிடித்ததால் விலா எலும்பு உடைந்தது…. ஊழியர் மீது பகிரங்க குற்றச்சாட்டு…. இப்படி கூடவா நடக்கும்?….!!!!

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இளம்பெண் ஒருவரை கடந்த மே மாதம் சக அலுவலக நண்பர் ஒருவர் பெண்ணை இறுக அணைத்து கட்டி பிடித்துள்ளார்.  அந்த சமயத்தில் பெண்ணுக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் இயல்பாக இருந்த நிலையில், இரவில் மீண்டும் வலி வர அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க கூறியுள்ளனர். பின்னர் ஸ்கேன் அறிக்கையை பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருப்பதாக கூறியுள்ளனர்.

இதை கேட்ட அந்த பெண் பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் சில மாதங்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். சிகிச்சை முடிந்து அலுவலகம் திரும்பிய அவர் தனது எலும்பு முறிவுக்கு காரணமாக இருந்த நபரிடம் தனது மருத்துவ செலவுக்கான பணத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் நான் இப்படி செய்யவே இல்லை என்று மறுக்க அந்தப் பெண் நீதிமன்றத்தை தொடர்பு கொண்டு உள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் “அந்த பெண் வேறு எங்கும் எழும்பை உடைத்துக் கொண்டதற்கான ஆதாரம் இல்லை. எனவே, இளம்பெண்ணை கட்டி பிடித்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்” என்று உத்தரவிட்டது.

Categories

Tech |