Categories
உலக செய்திகள்

இலங்கையில் வெடித்த மாணவர்கள் போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொந்தளிப்புக்குள்ளான மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். அப்போது அதிபர் மாளிகை மற்றும் அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களை சூறையாடியனர். இதன் காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து அதிபராகயிருந்த கோத்தபயராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இலங்கையில் புது அதிபராக ரணில் விக்ரம சிங்கே சென்ற மாதம் 21ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையில் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான புது அரசு அமைந்தாலும், அதிபர் கோத்தபயராஜபக்சேவுக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தலைநகரான கொழும்புவில் அடக்கு முறையை நிறுத்துவதுடன், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்யக்கோரியும் மாணவர்கள் சங்கத்தினரால் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் “டீல் ரணில் – ராஜபக்சே அரசை விரட்டியடிப்போம்” என பாதகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டத்தை கலைத்தனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அத்துடன் போராட்ட ஏற்பாட்டாளர் வசந்தம் முதலிகே உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |