தமிழகத்தில் பண்டிகை காலம் என்றால் புத்தாடை வாங்குவது பலகாரம் செய்வது ஆகியவற்றிற்கு ஆகும் செலவை விட மிக அதிகமாக பெருந்து கட்டணத்துக்கு வழங்க வேண்டியதாக உள்ளது. கல்வி, வேலைக்காக சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர் போன்ற வெளிநகரங்களுக்கு சென்று விட்டு ஊர் திரும்புவர்களின் நிலைமை ஒவ்வொரு பண்டிகையின் போதும் இதுதான். இந்த நேரத்தில் பலரும் சொந்த ஊருக்கு செல்ல முனைப்பு காட்டுவதால் இதுதான் சமயம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துகின்றனர். இணையதளங்களில் பட்டவர்த்தனமாக கட்டணத்தை உயர்த்தி விற்பனையை அரசு கண்டு காணாமல் உள்ளது என்பதை மக்களின் குற்றச்சாட்டு. அதனை தொடர்ந்து போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியும் கட்டணம் குறைந்தபாடில்லை. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு கட்டணம் கொள்ளை அரங்கேறியது.
தற்போது இன்று கோகுலாஷ்டமி விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டணக் கொள்கையில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரூ.11,04,000 அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வரை தொடர் விடுமுறை காரணத்தால் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்கள் அடிப்படையில் போக்குவரத்து ஆணையர்கள் முன்னிலையில், போக்குவரத்து ஆணையர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வுகள் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மூலம் 953 பேருந்துகளுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டண வசூலிக்கப்பட்டதாக புகார் தெரிவித்த 97 பேருக்கு கட்டணங்களை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறு திரும்ப வழங்கப்பட்ட தொகை ரூ.68,090. இதில் 4 ஆம்னி பெருந்துக்கள் முறையான பெர்மிட் இல்லாமல் செயல்பட்டதால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 11,04,000 அபதாரம் தொகை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார் .