சிம்புவின் வெந்தது தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.
இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் சிம்பு வெந்தது தணிந்தது காடு திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 2-ம் தேதி இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் இதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்ப இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது. மேலும் சென்னை வேல்ஸ் யுனிவர்சிட்டியில் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.