Categories
மாவட்ட செய்திகள்

பலகாரம் செய்த ஊழியர்…. திடீரென வெடித்த கியாஸ் சிலிண்டர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

டீக்கடையில் பற்றி எரிந்த  தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் பாலமுருகன் என்பவர் டீக்கடை ஒன்றை  வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் ஊழியர் ஒருவர் நேற்று கியாஸ் சிலிண்டர் அடுப்பில் பலகாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியானது. இதனை ஊழியர் பார்ப்பதற்குள் கியாஸ்  அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் வெடித்து சிதறியுள்ளது.

இதனை பார்த்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து அலறி அடித்து கொண்டு ஓடினர். இந்த டீ கடை   வாசலில் நின்ற மோட்டார் சைக்கிள்களுக்கும்  தீ  பரவியுள்ளது.  இது குறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் 2 மோட்டார் சைக்கிள்களும்   எரிந்து  நாசமாகியுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |