செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்கள் குடிவாரி பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி, அதற்கான விழுக்காடு கொடுக்காமல், நீங்கள் மூடி வைத்துக் கொண்டு அனுபவித்தால் அதை எப்படி ஏற்க முடியும். அது எப்படி சாதிய மோதலை துண்டுவதாகும்? ஜாதி வாரிய எண்ணிக்கையை எப்படி அறிந்து கொள்வதாக இருக்கும்?
மெஜாரிட்டியாக இருக்கிற தமிழ் சமூகத்தை புறக்கணித்துவிட்டு, வந்தவன் போனவன் எல்லாம் அனுபவித்து விட்டு, மஞ்சள் குளிப்பீர்களா? சாதி வேண்டாம் என்றால், சாதி வேண்டாம் என்று ஒரு தலைமுறை கடக்கும், அதைத்தான் அண்ணல் அம்பேத்கர் சொல்கின்றார்கள். அவனே அருவெறுத்து ஒதுங்குவார்கள், ஆனால் இன்றைக்கு இருக்கின்ற அமைப்பு முறை அப்படி இருக்கிறது.
இடஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா ? எதிர்க்குறீர்களா ? ஜாதியை எப்படி ஒழிப்பீங்க. சாதிவாரி கணக்கிடுவதினால் ஜாதி எப்படி வளரும் என்று சொல்கிறீர்கள், கட்சிக்குள் முரண் இல்லை, சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் கணக்கெடுப்பு எடுத்து, அதனை சமத்துவபடுத்த வேண்டும். பி.பி மண்டல் என்ன சொல்கிறார் ? சமத்துவம் இருக்கின்ற இடத்தில் சமத்துவத்தை பேசினால் தான், சமத்துவம் நிலவும். சமத்துவ தன்மையற்ற இடத்தில் சமத்துவத்தை பேசினால், சமத்துவமற்ற தன்மை வளர்த்துக் கொள்வதற்கு தான் வாய்ப்பு அளிக்கும் என்கிறார்.