பிரபல பாடலாசிரியர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில், விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றாலும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இளைஞர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வரும் நிலையில், கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதன் காரணமாக பாடல் ஆசிரியர் மணிமாறன் நான் பெண்ணின் கண்களுடன் ஒப்பிட்டுதான் கஞ்சா பூ என்ற பாடலை எழுதியதாகவும், நான் எழுதிய வார்த்தைகள் தவறுதான் என்றும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.