வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த அப்டேட் விரைவில் வரவுள்ளது. அதன்படி, பயனாளர்கள் ஒருமுறை பார்க்கக்கூடிய (view once) போட்டோக்கள், வீடியோக்களை இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. அப்படி எடுக்க முயன்றால், அது தானாகவே தடுக்கப்படும். யாரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து மிரட்டுவதை தடுக்க இது உதவும். அதாவது, பயனாளர்களின் தனியுரிமையை இது பாதுகாக்கும். தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் சோதனை தொடங்கியுள்ளது. விரைவில் அனைத்து பயனருக்கும் கிடைக்கும்.
Categories