மரத்தில் கார் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கம்பளி ஊரில் இருக்கும் வயலில் விவசாயிகள் சூரியகாந்தி பூக்களை வளர்த்து வருகின்றனர். இதனை பார்க்க கேரள மாநிலத்தில் இருந்து வாலிபர்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர். நேற்று மாலை திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்(52), அவரது மனைவி மினி(52), அதே பகுதியில் வசிக்கும் தீபு(50), பிஜூ(52) பிரசாந்த்(59) ஆகியோர் காரில் வந்து சூரியகாந்தி பூக்களை பார்த்து புகைப்படம் எடுத்து ரசித்தனர்.
பின்னர் மாலையில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.