Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20யில் தகுதியற்றவரா தவான்?….. “இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே போர் தான்”….. உஷார்படுத்தும் முன்னாள் வீரர்..!!

இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே ஷிகர் தவானுக்கு ஒரு போர் போன்றது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரிலும், அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் 50 ஓவர் உலக கோப்பை தொடரையும் கைப்பற்றும் நோக்கத்தில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அணியை வலுப்படுத்தி வருகிறது.
இந்திய அணி தொடர்ந்து பல தொடர்களில் விளையாடி வருவதால் இளம் வீரர்களை கொண்ட ஒரு அணியும், சீனியர் வீரர்களை கொண்ட  ஒரு அணியாகவும்  பிரித்து பங்கேற்று விளையாடி வருகின்றது.

இப்படி தனித்தனியாக பிரித்து விளையாடுவதன் மூலம் நல்ல திறமையாக விளையாடுபவர்களை முதன்மை அணியில் சேர்க்க இந்த சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் அடுத்த கட்டமாக வரும் தொடர்களில் அணி நிர்வாகத்தால் ஆதரவு அளிக்கப்பட்டு தொடர்ந்து விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.ஒவ்வொரு வீரர்களும் அடுத்தடுத்த தொடர்களில் இடம் பிடிப்பதற்கு போட்டி போட்டு வருகின்றனர். தங்களது  திறமையை நிரூபித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நிலையில், ஷிகர் தவானும் அதற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கூறியதாவது, தற்போது இந்திய அணியில் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள்.. அதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிகர் தவனுக்கு மட்டும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. ஐபிஎல் தொடரில் 6,000 ரன்களுக்கும் மேல் குவித்தும் தவனுக்கு ஏன் இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்க மறுக்கப்படுகிறது என்று தனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் 500 முதல் 600 ரன்கள் வரை அடித்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார். ஆனாலும் கூட இந்திய டி20 அணியில் அவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளார். டி20 கிரிக்கெட் போட்டியில் தவன் விளையாட தகுதி அற்றவர் என்று சொல்ல முடியுமா?, அது உங்களால் முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் தவன் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சற்று சுமாராக விளையாடியதன் காரணமாக இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே அவருக்கு ஒரு போர் மாதிரி தான். ஏனென்றால் தவான் ஏதாவது ஒரு தொடரில் சொதப்பி விட்டால் கூட இந்திய அணி நிர்வாகம் ஒரு நாள் கிரிக்கெட்  வாய்ப்பையும் தர மறுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இவர் கூறியது போலவே தவன் டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் ஓரங்கட்டப்பட்டுள்ளார். ஏதோ பேருக்கு ஒரு நாள் தொடரில் மட்டும் அவ்வப்போது கேப்டனாக அறிவிக்கப்பட்டு வருகிறார்.. எனவே ஏதாவது ஒரு தொடரில் சொதப்பினால் கூட 36 வயதை காரணம் காட்டி ஓரம் கட்டப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |