செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு நடத்திய செஸ் ஒலிம்பியாட்டில் நாங்கள் உள்ளதை சொல்லப் போகிறோம், நீங்கள் பாராட்டினால், நாங்களும் பாராட்ட வேண்டும் என்று அவசியம் இருக்கிறதா? அதுபோல் எந்த அவசியமில்லை. எங்களுக்கு என்று ஒரு நீதி இருக்கிறது, நல்லது செய்தால் பாராட்டுவோம்.
நல்லது இல்லை என்றால் நல்லது இல்லை என்று தான் சொல்வோம் அதில் என்ன இருக்கிறது. நீங்கள் பாராட்டினால் நாங்களும் பாராட்ட வேண்டும் என்று கிடையாது. செஸ் ஒலிம்பியாட்டை பிரதமர் பாராட்டியது அவர்களுடைய கருத்து, எங்களுடைய கருத்து என்னவென்றால் இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியும், விழா நடத்தினீர்கள்.
மகாபலிபுரம் ஹோட்டலில் பத்து நாளுக்கு முப்பது கோடி ரூபாய் பில் போட்டுள்ளார்கள். ஒரு ஹோட்டல் கட்டிவிடலாம், இது எங்க போய் சொல்வது ? இது எல்லாம் என்ன நடந்தது என்று தெரியாது ? விசாரித்தால் தான் தெரியும், ஊழல் கூட இருக்கலாம். கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் கூட இருக்கலாம்.ஒரு விளையாட்டு தமிழ்நாட்டுக்கு வருவது என்பது நல்ல விஷயம் தான். அதில் எங்களுக்கு எந்தவித மாறுபட்ட கருத்து கிடையாது.
ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி சிறப்பாக நடத்தினார்களா ? இல்லையா ? என்று கேட்டால் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதைவிட சிறப்பாக நடத்தி இருப்போம். ஆனால் இதில் வந்து ஒரு சொத்தோ எதுவும் இதை வைத்து சென்னையில் நல்ல மேம்பாடு திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம், அதை கொண்டு வரவில்லை என்று தான் நாங்கள் சொல்கிறோம் என தெரிவித்தார்.