செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சீனா இறுதிப் போர் முடிந்த பிறகு இலங்கை உள்ளே வந்துட்டு, இறுதி போரில் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக நின்று உள்ளே வந்து, பல்வேறு திட்டங்களை இலங்கைக்கு செய்துள்ளது. மின்சாரம் தயாரித்து கொடுக்கிறோம், வலுவாக துறைமுகங்கள், விண்ணூர்தி நிலையங்கள் எல்லாம் அமைத்துக் கொடுத்து இலங்கையில் வந்து நின்றிருக்கிறது.
ஏன் ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு வரைக்கும் கூடாரம் அமைத்து நிற்கிறது. இப்போ இந்த உளவு கப்பல் வருவது என்பது முன்கூட்டியே தெரியும், ஆனால் இந்தியாவில் அதை எதிர்த்து பேசவோ, தடுக்கவோ முடியவில்லை. இலங்கை வந்து இந்தியாவோடு நட்பு இருக்கிற மாதிரி காட்டுமே ஒழிய, அது எப்பவுமே சீனர்கள், பௌத்தர்கள், நாமும் பௌத்தர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் சீனா பக்கம் தான் இருக்கும்.
ராஜபக்சேவே தெற்கு ஆசியாவில் வலிமையான நாடு சீனாதான், நாங்கள் அதன் பக்கம் தான் நிற்போம் என்று பேசுனது எல்லாம் இருக்கு. அதனால் நமக்கு பேராபத்தான நிலைதான் இது, இந்தியா எச்சரிக்கையுடன் கவனத்துடன் அனுசரிக்க வேண்டும், அதையும் மீறி இன்னும் இலங்கைக்கு பணம் கொடுத்து உதவுவது, ஆயுதம் கொடுப்பது, பயிற்சி கொடுப்பது அதையெல்லாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.