Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

லண்டனில் தமிழன் சிலை…… 100% உறுதி….. மீட்டு கொண்டு வருமா தமிழக அரசு….? எதிர்பார்ப்பில் தமிழர்கள்…..!!

தஞ்சை சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை  சுந்தரபெருமாள் கிராமத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோகச் சிலை 1957 முதல் 1967 காலகட்டத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.   இதனை விசாரிக்க புலன்விசாரணை அதிகாரியாக சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டு,

சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இந்த சிலை ஒன்றின் புகைப்படம் காணாமல் போன திருமங்கை ஆழ்வார் சிலை புகைப்படத்துடன் 100% ஒத்துப் போவதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சிலையை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |