அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், போன தேர்தலின் போது அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக, டெல்லியில் இருந்த நலம் விரும்பிகள் என்னோடு பேசினார்கள், அவர்களிடம் சொன்னேன்.. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக தொடர்ந்தால் நிச்சயம் தமிழகத்தில் அம்மாவுடைய ஆட்சியை கொண்டுவர முடியாது. திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருவதை தடுக்க முடியாது.
அதனால் வேறு ஒருவரை அந்த பதவி வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அதுபோல எங்களுக்கு 40, 50 தொகுதிகளிலேயே அண்ணா திமுகவை விட சிறந்த வேட்பாளர்கள் தகுதியான வேட்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கான வாய்ப்பை நீங்கள் பெற்றுத் தாருங்கள், உங்களுடன் கூட்டணி வருகிறோம் என்று நான் அன்று சொன்னேன்.
நான் தேர்தலில் நிற்கவில்லை என்று சொன்னேன். என்ன காரணம் என்றால் ? இரண்டு காரணம். அதில் ஒன்று, 2017 முதல் முறை அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு தேர்தலில் நான் நின்றதை பார்த்து பயந்து தான் இவர்கள், நீங்கள் எல்லாம் சேர்ந்து என்னை முதலமைச்சராக மாற்றி விடப் போகிறீர்களோ என பயந்து தடை செய்து பார்த்தார்கள். அதனால் அது போன்ற பயமெல்லாம் வேண்டாம். இப்போது நான் தவறு செய்திருந்தால் நான் தான் பார்த்து பயப்பட வேண்டும்.
அவர் பயப்பட மாட்டார். அதனால் என்னை பார்த்து ஏன் பயந்தார்கள் என்று உங்களுக்கு தெரியும் ? குற்றம் உள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும், என்னதான் ராவணன் மாதிரி அரக்கர்களாக இருந்தாலும்… நேரா பார்க்கின்ற போது பயம் வரும் அல்லவா. அதனால் என்னுடன் இணைவதற்கே பயந்தவர்கள், அவர்களுக்கு பயம் வேண்டாம். நான் சட்டமன்ற தேர்தலில் நிற்கவில்லை என்று சொன்னேன், வேறு எதுவும் கிடையாது என தெரிவித்தார்.