அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தனிமனித வெறுப்பு எனக்கு யாரிடமும் கிடையாது.எடப்பாடி தவறானவர், துரோக சிந்தனை உள்ளவர், தனது சுயநலத்திற்காக யாரையும் கெடுக்கக் கூடியவர், அந்த நபரோடு நீங்கள் பயணிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்தவன் நான். அவருடன் இருக்கும் 10 பேரும் அவர்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கின்ற காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எல்லோரையும் எல்லா நாளும் நாம் ஏமாற்ற முடியாது, அதுவும் அம்மாவின் தொண்டர்களை, புரட்சித்தலைவியின் தொண்டர்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது.
தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. இவர்கள் தூக்கி எறியப்படக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. யாரை ஏமாற்றி அவர்கள் நான்கு ஆண்டுகள் ஆட்சி பொறுப்பிலே அமர்ந்திருந்தார்களோ, அவர்களும் விழித்துக் கொண்டு விட்டார்கள். வருங்காலத்திலே இவர்கள் தங்கள் தவறுகளுக்கு, துரோகங்களுக்கு தண்டனை பெறப் போகிறார்கள்.
அம்மாவின் உண்மையான தொண்டர்களின் இருப்பிடமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான் இருக்கப் போகிறது. இந்த இயக்கம் தான் வருங்காலத்திலே அம்மாவின் திட்டங்களை, லட்சியங்களை, கொள்கைகளை, புரட்சி தலைவரின் கொள்கைகளை, அவர்களின் கனவுகளை தமிழ்நாட்டிலே தொடர்ந்து கொண்டு செல்கின்ற இயக்கமாக இருக்கப் போகிறது. அம்மாவின் ஆட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலே நிச்சயம் அமையும். அதற்காக உழைக்கக்கூடிய அனைவரும் இங்கே கூடியுள்ளீர்கள்.
நீங்கள் எல்லாம் திரும்ப விரும்பினால் தான் நான் பொதுச் செயலாளர், தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் இன்னும் தலைவர் பதவியை நீங்கள் நிரப்பாமல் இருக்கிறீர்கள் ? தேர்ந்தெடுக்காமல் இருக்கிறீர்கள் என்று… ஒரு பதவியை இன்றைய காலத்தில் காலியாக வைத்துக் கொள்ள முடியாது, போன முறை பதில் அளித்தோம் என தெரிவித்தார்.