அமமுக கட்சியின் பொதுக்குழுவில் பேசிய டிடிவி தினகரன், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி மூலம் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் திமுகவை வீழ்த்த முடியும் என டெல்லியில் உள்ள என்னுடைய நலம் விரும்பிகள் என்னை கூட்டணிக்கு அழைத்தார்கள். நான் எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்றால் தமிழகத்தில் ஜெயிக்க முடியாது.
அவர் முதல்வர் என்றால் நாங்களும் கூட்டணிக்கு வரவில்லை. வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துங்கள் நாங்கள் கூட்டணிக்கு வருகின்றோம் என தெரிவித்தார். மேலும், நான் தேர்தலில் நிற்கவில்லை என்று சொன்னேன். என்ன காரணம் என்றால் ? இரண்டு காரணம்.
அதில் ஒன்று, 2017 முதல் முறை அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு தேர்தலில் நான் நின்றதை பார்த்து பயந்து தான் இவர்கள், நீங்கள் எல்லாம் சேர்ந்து என்னை முதலமைச்சராக மாற்றி விடப் போகிறீர்களோ என பயந்து தடை செய்து பார்த்தார்கள்.
அதனால் அது போன்ற பயமெல்லாம் வேண்டாம். இப்போது நான் தவறு செய்திருந்தால் நான் தான் பார்த்து பயப்பட வேண்டும். அவர் பயப்பட மாட்டார். அதனால் என்னை பார்த்து ஏன் பயந்தார்கள் என்று உங்களுக்கு தெரியும் ? குற்றம் உள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும், என்னதான் ராவணன் மாதிரி அரக்கர்களாக இருந்தாலும்… நேரா பார்க்கின்ற போது பயம் வரும் அல்லவா.
அதனால் என்னுடன் இணைவதற்கே பயந்தவர்கள், அவர்களுக்கு பயம் வேண்டாம். நான் சட்டமன்ற தேர்தலில் நிற்கவில்லை என்று சொன்னேன், வேறு எதுவும் கிடையாது. ஏனென்றால் நம்மோடு பயணிப்பவர்கள் நான்கு ஆண்டுகள் இத்தனை நெருக்கடியிலும், இத்தனை சோதனைகளிலும் நம்மோடு பயணிப்பவர்களுக்கு ஒரு 40, 50 பேருக்கு சீட்டு கிடைத்தாலே போதும்.. நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சொன்னேன்.
ஆனால் கடைசியில் நடந்தது என்னவென்று தெரியும் ? அது போல பழனிச்சாமி தலைமையில் தேர்தலை சந்தித்தால், 100 சீட்டு வேண்டுமானால் நாங்கள் வந்தாலும் ஜெயிக்க முடியும். நான் எதார்த்தத்தை சொன்னேன், கண்டிஷனாக சொல்ல வில்லை. அவர்களுடன் ஆலோசிக்கும் போது அவரிடம் சொன்னது தான். ஆனால் திமுக வந்துவிடக்கூடாது என்கின்ற ஒரே காரணத்திற்காக நாம் அதற்கும் ஒத்துக்கொண்டேன் என தெரிவித்தார்.