சென்னை அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் இன்று முதல் தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு கடந்த 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அந்த தரவரிசை பட்டியலில் குறைகள் மற்றும் ஆற்றிய பணி இருக்கும் மாணவர்களிடம் மனுக்களை பெற்று குறைகளை நிவர்த்தி செய்வதற்கான அவகாசம் முடிவடைந்தது. இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கவுன்சிலிங் இன்று முதல் தொடங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக சிறப்பு பிரிவு ஒதுக்கீடு பெறும் 25 ஆயிரத்து 18 மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.
பிறகு வருகின்ற 23ஆம் தேதி வரை சிறப்பு பிரிவு கவுன்சிலிங் நடத்தப்படும் என்றும் 25ஆம் தேதி முதல் பொது கவுன்சிலிங் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கான ‘சாய்ஸ் பில்லிங்’ என்ற விருப்ப கல்லுாரிகளின் பதிவு விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்