Categories
அரசியல் தேசிய செய்திகள்

அடுத்த பிரதமர் இவர்தான்?….. மோடிக்கு சவால் விடுக்கும் எதிர்க்கட்சி…. அரசியலில் புதிய பரபரப்பு…..!!!!

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக வருவதற்கு பீகார் முதல்வர் நித்திஷ் குமாருக்கு ஆட்சேபனை இல்லை என்று ஜேடியு கட்சி தெரிவித்துள்ளது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதே நித்திஷ் குமாரின் முக்கிய கவனம். பீகார் சட்டசபை தேர்தலில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

அதன் பிறகு பல்வேறு கட்சித் தலைவர்களை சந்திக்க நித்திஷ் குமார் டெல்லி வருவார் என ஜேடியு தலைவரான லலன்சிங் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் வேட்பாளராக எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. ஆனால் மற்ற கட்சிகள் விரும்பினால் அதுவும் சாத்தியமாகும். இந்தியாவில் பாஜக கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்த நிதிஷ் குமாரை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பலர் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அடுத்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் தலைவர் யார் என்பதை எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து முடிவு செய்யும். இல்லையென்றால் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிக்க வேண்டும். பாஜகவை எதிர் கொள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் நிதிஷ்குமார் பணியாற்றுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |