இங்கிலாந்தில் இதற்கு முன் இல்லாத வகையில் உணவு மற்றும் எரிபொருள்களை விலை அதிகரித்து வருகிறது. எனவே செலவினங்களை சமாளிக்கக்கூடிய வகையில் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு அதற்கு செவிசாய்க்க மறுப்பதால் ரயில்வே ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தலைநகர் லண்டனில் உள்ள சுரங்க ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இதனால் லண்டன் முழுவதும் ரயில் சேவை ஸ்தம்பித்துள்ளது. ஊழியர்களின் போராட்டக்காரர்கள் 5 ல் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்களுக்கான அவதிக்குள்ளாகியுள்ளனர்.