இந்தியாவில் வரும் 2030 ஆம் வருடத்தில் 60 லட்சம் பேர் மில்லியனர்களாக இருப்பார்கள் என்று எச்.எஸ்.பி.சி வங்கி தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
எச்.எஸ்.பி.சி என்னும் வங்கி வெளியிட்டு இருக்கும் ஆய்வறிக்கையில், வரும் 2030 ஆம் வருடத்தில் 8 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்புடைய இந்திய மக்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உயரும் என்று குறிப்பிட்டிருக்கிறது. சுமார் பத்து லட்சம் டாலர்கள் வைத்திருப்பவர்கள் மில்லியனர்கள் எனப்படுகிறார்கள்.
இந்திய மதிப்பில் இது எட்டு கோடி ரூபாய். அதன்படி வரும் 2030 ஆம் வருடத்திற்குள் இந்திய நாட்டில் 60 லட்சம் பேர் மில்லியனர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. வரும் 2030 ஆம் வருடத்தில் சீனாவில் சுமார் 5 கோடி பேர் மில்லியனர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.