Categories
மாநில செய்திகள்

சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவிற்கு வரவேண்டும்….. மனோஜ் பாண்டியன்….!!!!

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவிற்கு வர வேண்டும் என்பதை தொண்டர்களின் விருப்பம் என அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவுமான மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.  விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு நாளையொட்டி, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘செப்டம்பர் 1ஆம் தேதி பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும்போது அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் பன்னீர் செல்வத்திற்கு பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிப்போம். சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ். மக்கள் மன்றத்திலும் வெற்றி பெறுவார். உண்மையான கட்சி உண்மையான அதிமுக ஓ.பி.எஸ். தலைமையில் தான் இருக்கிறது. தொண்டர்களின் நலனுக்காகவே ஒவ்வொரு நகர்வையும் ஓ.பி.எஸ். எடுத்து வைப்பார்.

எல்லோரும் ஒன்று சேர்ந்து, அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் ஒரே குடையின் கீழ் செயல்பட வேண்டும் என்பதுதான் ஓ.பி.எஸ்-ன் விருப்பமாகும். அதனால் தான் சேர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்திருக்கிறார். சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இருவரும் இணைய வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தையே ஓ.பி.எஸ். வெளிப்படுத்தி இருக்கிறார்’ என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |