Categories
மாநில செய்திகள்

துணைவேந்தர் நியமனத்திற்கு எதிர்ப்பு…. தலைமை செயலருக்கு ஆர்.என்.ரவி பரபரப்பு கடிதம்….!!!

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. இந்நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களே மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவில் தாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில் தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்திற்கு கீழ் இருந்த துணைவேந்தர்கள் நியமனம் இனி மாநில அரசு நேரடி அதிகாரத்திற்கு வரும். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த மசோதா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் துணைவேந்தர் நியமனம் மசோதா குறித்து விளக்கம் அளிக்க கோரி தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஆர் ள்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், துணைவேந்தர்களை அரசு நியமிப்பது பல்கலை சட்டத்திற்கு புறம்பானது என்றும் துணைவேந்தர்கள் அரசே நியமனம் செய்வது அரசியல் தலையீட்டுக்கு வழிவகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கும் ஆளுநர் துணைவேந்தரை தேர்ந்தெடுத்து நியமிக்கிறார். துணைவேந்திரன் தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழுவை மாநில அரசு அமைக்கும். இந்த குழுவிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து ஆளுநருக்கு மாநில அரசு வழங்கும். அவர் மாநில அரசுடன் கலந்த ஆலோசித்து துணைவேந்தர்கள் நியமனம் செய்வார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்த நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டதக்கது.

Categories

Tech |