மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகர் சீதாபுல்டியில் உள்ள மருத்துவமனையில் காஜல் என்பவர் பண்ணியாற்றி வருகிறார். இவர் அங்கித் ரண்டிவ்(25) என்ற இளைஞனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காஜல் திடீரென தனது காதலை முடித்துக் கொள்ள முடிவு செய்து சூராதேவி என்ற இடத்தில் தனது காதலன் உறவை முறித்துக் கொள்வது குறித்து பேசி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரண்டிவ் காஜலை தாக்கி, கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். அதன் பிறகு அவர் தப்பி ஓடி விட்டார். காஜலின் பிணத்தை பார்த்து அப்பகுதி மக்கள் கொரடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நகரின் காபர்கெடா பகுதியில் இருந்து அவரை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.