இந்தியாவின் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்சர் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது . இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.இதில் பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
புதிய வட்டி:
7 – 29 நாட்கள் : 2.75%
30 – 90 நாட்கள் : 3.25%
91 – 184 நாட்கள் : 3.75%
185 – 1 ஆண்டு : 4.65%
1 ஆண்டு – 2 ஆண்டுகள் : 5.50%
2 ஆண்டுகள் – 3 ஆண்டுகள் : 5.60%
3 ஆண்டு – 5 ஆண்டு : 6.10%
5 ஆண்டு – 10 ஆண்டு : 5.90%
5 ஆண்டு (80C வரி சேமிப்பு டெபாசிட்) : 6.10%