கடகம் ராசி அன்பர்களே, இன்று முன்னேற்றம் கூடும் நாளாகத்தான் இருக்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற் கொள்வீர்கள். சுப விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் போன்றவை கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தலாம். இன்று எதிர்ப்புகள் ஓரளவு அகலும்.
எதையும் ஒரு முறைக்கு, பல முறை யோசித்து செய்யுங்கள். யாருக்காவது எந்த ஒரு உத்திரவாதம் தரும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். கடுமையான முயற்சிக்குப் பின் வெற்றி வாய்ப்புகளை நீங்கள் பெற முடியும். இன்று கொடுக்கல் , வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், ஆசிரியர்களிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின், கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், ரொம்ப நல்லது. படித்த பாடத்தை எழுதி பார்ப்பது ரொம்ப, ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்,அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் இளம் சிவப்பு நிறம்