Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகளை புரட்டி போட்ட பயங்கர புயல்…. 13 பேர் பலி… மாயமானவர்களின் நிலை என்ன…?

ஐரோப்பிய நாடுகளில் புரட்டிப்போட்ட பயங்கர புயலால் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து கடுமையான வெப்ப அலை வீசி வருகின்றது. இதனால் பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வெப்ப அலைக்கு நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்திருக்கின்றனர். பல நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான திடீர் புயல்கள் அந்த நாடுகளை புரட்டி போட்டுள்ளது. பிரான்ஸ் இத்தாலி மற்றும் ஆசியா  போன்ற நாடுகளை பயங்கர புயல்கள் தாக்கியுள்ளது.

இந்த புயலின் காரணமாக அந்த நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்கள் சிதைந்து போய் உள்ளது. புயல்களால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தது மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தது. புயல்களில் சிக்கி வீடுகள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்திருக்கின்றது. மேலும் புயல்களைத் தொடர்ந்து அந்த நாடுகளில் கனமழை கொட்டி தீர்த்து வருவதனால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. சாலைகள், சுரங்க ரயில் நிலையங்கள் போன்றவை வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றது.

புயல் மழை காரணமாக மின்சாரம் தகவல் தொடர்பு மற்றும் சாலை போக்குவரத்து போன்றவை துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. இதற்கிடையே புயல்கள் தொடர்பான சம்பவங்களில் பிரான்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகளில் சிறுவர்கள் உட்பட13 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் பலர் மாயமாக இருப்பதாகவும் அவர்களின் நிலை என்ன என்பது பற்றி தெரியவில்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |