செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நான் வெளிப்படையாக சொல்கிறேன். ஓபிஎஸ் நல்ல எண்ணத்தில் கூப்பிட்டார்கள், மக்கள் சொல்லுகிறார்கள், எல்லாம் சொல்கிறார்கள் நல்லா யோசனை செய்துதான் கூப்பிட்டார். அது ஆலோசிப்போம் என்று சொல்லலாம், பேசலாம் என்று சொல்லலாம், அல்லது மக்களின் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் சொன்னதை பேசலாம்.
பாருங்கள் இழவு விழுந்து வீடு மாதிரி இருக்கிறது, ஒருத்தர் முகத்திலும் சிரிப்பு இருக்கிறதா? என்ன சொன்னாலும் ஜால்ரா அடித்துக் கொண்டு சுற்றி நின்னுட்டு, அதை பார்த்தால் நீங்கள் என்ன பேசுகிறார்கள் என்று உங்களுக்கும் புரியல.. பக்கத்தில் இருக்கின்ற கே பி முனுசாமிக்கும் தெரியவில்லை. ஆகவே அழைத்தோம் பெரிய மனிதருடன், பெரிய மனிதராக உயர்ந்த உள்ளத்துடன் எங்களது தலைவர் அழைத்தார்.
தேவையில்லாமல் இதை பேசிக்கொண்டு போனால் மிகவும் வேதனையாக இருக்கிறது. 2667 பேர் தான் இதயம் என்று அவர் சொல்கிறார், பிறகு ஒன்றை கோடி பேர் யார் ? இதை நான் தான் கிளறுகிறேன். ஒன்றை கோடி பேர் என்று அம்மா சொன்னார்கள், 15 லட்சம் இருந்தது தலைவர் இருந்த காலத்தில், அதன்பிறகு ஒன்றரை கோடி ஆக மாறியது.
அதற்கு பின்னால் நான்கு வருடம் முதலமைச்சராக உட்கார்ந்திருக்கிறீர்களே, கட்சியில் எல்லா பொறுப்புகளையும் எடுத்தீர்கள், 1.50 என்பது 1.60 ஆக மாறி இருக்க வேண்டும் அல்லது ஒரு லட்சம் பேரை கட்சியை விட்டு எடுத்து விட்டீர்கள் 1.49 ஆக வேண்டும். அது என்னயா எப்போ பார்த்தாலும் 1.50, 1.50 ஒன்றரை கோடி என்று சொல்கிறீர்கள், அது ஏறவும் இறங்கவும் செய்யாதா? இந்த பட்டியல் எங்கே? விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.