Categories
தேசிய செய்திகள்

காலில் விழாதீங்க, கார் வாங்காதீங்க….! அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு…..!!!!

பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பாக அமைச்சராக பதவியேற்றவர்கள் தங்களுடைய துறை சார்பில் கார் வாங்க கூடாது என  தேஜஸ்வி யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பீகாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சார்பில் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் மீது கிரிமினல் புகார் உள்ளதாகவும், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பாஜக, விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், தனது கட்சியை சேர்ந்த அமைச்சர்களுக்கு துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அறிவிப்பில், அமைச்சர்கள் துறை சார்பில் தங்களுக்காக கார் வாங்கக்கூடாது. ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் காலில் விழுவதை அனுமதிக்கக்கூடாது. மற்றவர்களை சந்திக்கும் பொழுது வணக்கம் கூற வேண்டும்.

பூங்கொத்துக் கொடுப்பது வாங்குவதை தவிர்த்து விட்டு புத்தகங்களை பெற வேண்டும். ஏழைகள் மற்றும் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வருபவர்களை மத மற்றும் ஜாதி ரீதியாகவும், ஓரவஞ்சனையுடன் அணுக கூடாது அவர்களுடைய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார்.

 

Categories

Tech |