Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…சிக்கல்கள் விலகும்.. வாழ்க்கை துணையின் ஆலோசனை முன்னேற்றத்தை கொடுக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று சிக்கல்கள் விலகி, சிகரத்தைத் தொடும் நாளாகவே இருக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இன்று  வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.

எதிர்பாராமல் ஏற்படும், குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவி கிடைக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களின் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று  மனம் மகிழ்வாக இருக்கும். ஆலயம் சென்று வருவதற்காக சிறு தொகையை இன்று செலவிட நேரிடும்.

இன்று  காதல் கைகூடும் நாளாகத்தான் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக தான் இருக்கும். அதுபோலவே மாணவர்களுக்கு  இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கவலை வேண்டாம்.

இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்வது ரொம்ப சிறப்பு, அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |