Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வாங்கிய கடனுக்காக கொத்தடிமையாக வேலை பார்க்க 3 தொழிலாளர்கள்”… இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு…!!!!

ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவாரன்குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான சக்தி, மல்லிகா வசித்து வருகின்றார்கள். இவர்கள் மூன்று பேரும் கல்லூரி சேர்ந்து  ரத்தினகலா என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் தொழிலாளராக வேலை பார்த்து வந்தனர். அந்த நேரத்தில் ரத்ன கலாவிடம் பாண்டித்துரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதேபோல சக்தி மற்றும் மல்லிகா போன்றோர்  40,000 கடனாக பெற்றுள்ளனர். சக்தி, மல்லிகா வட்டியுடன் சேர்த்து 50000 திரும்ப செலுத்தியதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே பாண்டிதுரை, சக்தி, மல்லிகா போன்றோர் வேறு இடத்திற்கு வேலைக்கு சென்றதாக தெரிகின்றது. இதனால் ஆத்திரமடைந்த ரத்தின கலா இவருடைய உறவினர்  வேலு போன்றோர் மூன்று பேரையும் மீண்டும் தங்கள் செங்கல் சூளைக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அதன்பின் கடனாக பெற்ற பணத்தை கேட்டு அவர்கள் மிரட்டி தாக்கியுள்ளார்கள். மேலும் கடன் தொகையை திரும்ப செலுத்தும் வரை செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். இதனால் பாண்டிதுரை, சக்தி, மல்லிகா செங்கல் சூலையில் கடந்த ஆறு மாதமாக கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றார்கள்.

இது பற்றி தகவல் அறிந்த ஊத்தங்கரை கிராம நிர்வாக அலுவலர் பாபு அங்கு சென்று பாண்டிதுரை, சக்தி, மல்லிகா போன்றோரை  அழைத்துள்ளார். மேலும் அவர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் துணை போலிஸ் சுப்பிரண்ட்  அமலா அட்மின் விசாரணை மேற்கொண்டார். மேலும் ரத்தின கலா, வேலு போன்றோர்  மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் கொத்தடிமை சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். வாங்கிய கடனுக்காக பெண் உட்பட மூன்று தொழிலாளர்களை செங்க சூழலில் கொத்தரிமையாக வேலை பார்க்க வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |