மதுரையை சேர்ந்த பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 27). டீ குன்னத்தூர் ரெங்காபாளையத்தில் உள்ள தனது கணவரின் பெற்றோரை பார்ப்பதற்காக சண்முகப்பிரியா மதுரையிலிருந்து மொபட்டில் வந்துள்ளார். அதன்பின் மீண்டும் மொபைட்டில் தனது மாமியார் செல்லம்மாளுடன் மதுரைக்கு டீ குன்னத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த வாகனம் ஒன்று மொபட் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த இரண்டு பேரும் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகப்பிரியா இறந்து விட்டார். மேலும் மாமியார் செல்லம்மாளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது இது பற்றி டீ கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories