கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சூரியகுளம் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவழியாக வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முருகன்பூண்டி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நரசிம்மனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.