மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பால்பண்ணைசேரி பகுதியில் கொத்தனாரான கலைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான அலெக்சாண்டர் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் பத்தினியாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கலைமணியின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அவ்வழியாக வந்த ஆட்டோ மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த கலைமணி, அலெக்சாண்டர் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அழிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கலைமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.