மாநகராட்சி நடவடிக்கையால் ஒரே வாரத்தில் 1466 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த 1௦- தேதி முதல் 16-ஆம் தேதி வரை 813 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டு 2,631 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 1,446 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9,85,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மெரினா பென்செட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் கடந்த 1௦-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 1,492 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 62 கடை உரிமையாளர்களிடமிருந்து 50.9 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7,200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பாக கடந்த 1௦-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிந்த 254 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு தலா 1,550 ரூபாய் விதம் 4,40,200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.