Categories
தேசிய செய்திகள்

தம்பதியினரிடம் நகைகளை பறித்து சென்ற மர்மகும்பல்… மனைவியின் மாஸ்டர் பிளான்… சம்பவத்தில் புதிய திருப்பம்…!!!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரவர் சாமி, முத்துமாரி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். கணவன் மனைவி இருவருக்கும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதனால் ஒரே இருசக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கமாகும். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்ம  கும்பல் ஒன்று வைரவர் சாமி, முத்துமாரி தம்பதியினரை  வழி மறித்ததாக கூறப்படுகின்றது.

மேலும் காரில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 30 கிராம் தங்க நகைகளை பறித்திருக்கின்றார்கள். அப்போது வைரஸ் சாமிக்கும் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலுக்கும் கைகலப்பு ஏற்பட வைரவர்சாமி சரமாரியாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அதன் பின் காரில் இருந்து மர்ம கும்பல் முத்துமாரி நகைகளுடன் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் வைரவர் சாமியின் உடலை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவி முத்துமாரிக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து இருக்கின்றார். அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் கணவனை கூலிப்படையை ஏவி முத்துமாரி கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இசக்கி என்பவரை பிடித்து கணவனை கொன்றதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |