Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்….. போக்சோ சட்டத்தில் உறவினர் கைது…. குமரியில் பரபரப்பு…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே கம்பிலார் பகுதியில் ஜான் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் ஜான் செல்வம் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்ற போது 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து ஜான் செல்வம் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன்னுடைய தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதன் காரணமாக சிறுமியின் தாயார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜான் செல்வதை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |