இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ள நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகின்றது. அதேபோல இமாச்சலப் பிரதேசத்திலும் தற்போது மேக வெடிப்பு காரணமாக தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கபட்டுள்ளது. இதனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஆங்காங்கே ஏற்படும் நிலச்சரிவினால் மக்கள் பீதியடைந்துள்ளனர்..
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகி உள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 6 பேர் காணாமல் போய் உள்ளதாக (இறந்ததாக அஞ்சப்படுகிறது) மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.