Categories
அரசியல்

சென்னையின் பாரம்பரியங்கள் பலவற்றில்….. இவையும் முக்கியமானவை…. சென்னை தினத்தை முன்னிட்டு பார்க்கலாம் வாங்க….!!!!

நாளை மறுதினம் சென்னை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை தமிழகத்தின் தலைநகரமும் இந்தியாவினுடைய நான்காவது பெரிய நகரமும் ஆக விளங்குகிறது. நவீன பாரம்பரியமும் கலந்து பலதரப்பட்ட மக்களுடைய பிரதிபலிப்பதாக சென்னை கலாச்சாரம் திகழ்கிறது. இந்த நிலையில் மருத்துவம் தொடங்கி பல துறைகளில் முன்னோடியாக திகழும் சென்னையிள் உள்ள பிரபலமான பாரம்பரியமான இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்

1963 ஆம் வருடம் இந்தியாவில் பிரித்தானியர்களால் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூப் மோகன் என்ற இரண்டு ஆங்கில அதிகாரிகளின் முயற்சியில் கட்டுமான பணி தொடங்கியது. புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதால் இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது. இது சென்னை வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்க்க விரும்பப்படும் ஒன்றாக இந்த கோட்டை இருக்கிறது.

சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்களில் ஒன்று ரிப்பன் கட்டிடம். 1909 ஆம் ஆண்டு லோகநாத முதலியார் என்பவரால் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 1913 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை கொண்டு வந்த ரிப்பன் பிரபுவின் பெயர் இந்த கட்டிடத்திற்கு சூட்டப்பட்டது.

இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களுடைய நினைவாக 1952 ஆம் வருடம் மெட்ராஸ் போர்க் கல்லறை 2.75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இது சென்னை நந்தனம்பாக்கத்தில் உள்ளது. இந்த கல்லறையில் இறந்தவர்களுடைய உடல் எதுவுமே புதைக்கப்படாது. ஆனால் அதற்கு மாற்றாக அவர்களுடைய பெயர் அச்சடிக்கப்பட்ட நினைவு சின்னங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக கருதப்படுகிறது. இக்கட்டிடம் விக்டோரியா பேரரசியின் ஆட்சியில் நிறுவப்பட்டது. 1888 ஆம் ஆண்டு ஜே.டபிள்யு பிராசிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1892 ஆம் ஆண்டு இர்வின் வழிகாட்டின் படி கட்டி முடிக்கப்பட்டது

Categories

Tech |