Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள்.. புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்..!!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாகத்தான் இருக்கும். வளர்ச்சியில்  தளர்ச்சி ஏற்படும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசித்து கொடுங்கள், எந்த உத்திரவாதமும் கொடுக்காதீர்கள். தேவையான பண வசதி உங்களுக்கு இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் ஓரளவு அகலும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பூமி மூலம் லாபம் ஏற்படும், சகோதரர் உங்களுக்கு நண்பனாக இருப்பார்கள். வாழ்க்கை துணைக்கு ஏற்ப வசதிகளை செய்து கொடுப்பீர்கள்.

இன்று  வீட்டில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். தேவையான பொருட்களை இன்று வாங்க கூடும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வது ரொம்ப சிறப்பை கொடுக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு எப்பொழுதுமே அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |