சாமி சிலையை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனியாக ஆஞ்சநேயர் சன்னதி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஆஞ்சநேயர் சன்னதியின் பூட்டை உடைத்து அங்கு இருந்த 2 1/2 அடி உயர ஐம்பொன்னாலான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை திருடி சென்றுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் காவல்துறையினர் கோவிலில் ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிலையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.