Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. சாலையில் மாடுகள் வந்ததால் ” லாரி கவிழ்ந்து 2 பேர் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மொபட் மீது லாரி மோதிய  விபத்தில் 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் சாலையில் அமைந்துள்ள கால்வாய் அருகே நேற்று பெங்களூரில் இருந்து  லாரி ஒன்று  வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இவருடன் குணா என்பவர் கிளீனராக  வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாடுகள் சாலையில் ஓடிவந்துள்ளது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அவ்வழியாக  வந்த மொபட் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மொபட்டில்  வந்த செல்வராசு என்பவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயம் அடைந்த ஜெகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |